அமைச்சர்செய்திகள்

மதுரை அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி | ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை | அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

Madurai Avvai Corporation Girls High School | Additional classroom built at an estimated cost of Rs. 25 lakhs | Minister PDR Palanivel Thiagarajan inaugurated the function

மதுரை அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (15.06.2022) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணைமேயர் தி.நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் வசதிக்காக 2019-2020 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் ஒரு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, நகரப்பொறியாளர் திரு.லெட்சுமணன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், கல்விஅலுவலர் ஆதிராமசுப்பு, உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: