செய்திகள்போலீஸ்

மதுரை அலங்காநல்லூர் அருகே மது குடிக்க மூதாட்டி கொலை | தங்க நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட இருவர் கைது

Old woman killed for drinking alcohol near Alankanallur, Madurai Two persons, including a boy, arrested for robbing gold jewellery

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. (67). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பாண்டி இறந்துவிட காந்திமதி கணவரின் ஓய்வூதிய தொகையை வைத்து தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் காலையில் வழக்கம்போல் உறவினர் வீட்டிற்குள் வந்து பார்த்த போது காந்திமதி கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் மூதாட்டியின் மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் மூதாட்டியின் வீட்டருகே வசிக்கும் இளைஞர்கள் சிறுவன் மற்றும் முத்துராஜா. ஆகிய இருவரும் மது குடித்து உல்லாசமாக வாழ, மூதாட்டியின் நடவடிக்கையை கண்காணித்து, நேற்று நள்ளிரவில் குடி போதையில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு காந்திமதி அணிந்திருந்த செயின், தோடு, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்து சென்றது, போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனைதொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார் மூதாட்டியிடம் பறித்து சென்ற நகைகளை மீட்டனர். கஞ்சா, மற்றும் மது போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் உல்லாசமாக வாழ மூதாட்டியை கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: