மதுரை அறம் நண்பர்கள் இயக்கம் சார்பில் இரத்ததானம் முகாம்
Blood Donation Camp on behalf of Madurai Aram Friends Movement

நாடெங்கும் கொரானா தொற்றுக்கு எதிராக மருத்துவபணியாளர்கள் போராடிக்கொண்டு இருக்கும் சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட மக்களை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றும் சூழலில் மதுரை தெற்குவாசல் “அறம் நண்பர்கள் இயக்கம்” “குருதிதானம் அளிப்போம் சமுதாய நலனை காப்போம்’ என்ற முனைப்போடு மே 29 2021அன்று இராஜாஜி மருத்துவமனையோடு கைகோர்த்து தொடங்கியது.
இன்று காலை 9 மணிக்கு ராஜாஜி இரத்ததான வாகனத்தில் அப்பகுதி வாழ் மக்கள், தன்னார்வலர்கள் இளையோர்கள் என சமுக இடைவெளியோடு இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர். இவ்நிகழ்வில் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குருதிக் கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழுடன் பேரீச்சை பழம், பழச்சாறு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வை அறம் நண்பர்கள் இயக்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்தானம் நிகழ்வின் சில புகைப்படங்கள்