
மதுரை வடக்கு ஆவணியில் மூல வீதியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் சமூக ஆர்வலர் அசோக் என்பவர் நாடகம் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நெகிழி பைகளை பயன்படுத்துவதால், மண் வளம் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மாணவ மாணவியரை வெகுவாக கவர்ந்தது.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துணிப்பை மற்றும் நெகிழி இல்லா எழுது பொருள்களையும் வழங்கியும் ஊக்கப்படுத்தினார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1