
தமிழக முதல்வரால் துவக்கி வைத்த மகளிர்கான இலவச பேருந்து திட்டத்தில் இயக்கப்பட்டு வரும் சாதாரண கட்டணம் நகர் பேருந்தை போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் கோபால் ஐஏஎஸ், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் புதூர் பனிமனைகளுக்கு சென்றும் பேருந்தில் பயணம் செய்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் தினசரி 405 சாதாரண கட்டண நகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 2.25 லட்சம் பேர் பயணிக்கின்றனர். தற்போது வரை 8 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருகை புரிகின்றனர் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.