
மதுரை பசுமலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் சி.எஸ்.ஸரீமரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
இக்கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, தவில், மிருதங்கம், புல்லாங்குழல், பரதநாட்டியம், நாதசுரம், நாட்டுப்புறக்கலை ஆகிய பட்டயப் படிப்புகளும்.
மூன்றாண்டு பட்டப் படிப்பான பி.ஏ குரலிசை, பரதம், ஒராண்டு இசை ஆசிரியர் பயிற்சி நடத்தப்படுகிறது.
மாலை நேரக் இசைக் கல்லூரி 2 ஆண்டு சான்றிதழ் படிப்புகளான குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம்பூ நடத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச தங்கும் விடுதி வசதி உண்டு. தனித்தனியாக தங்கி இசை பயில 2023-2023ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர். சோக்கை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டூள்ளது. எனவே, இசையில் ஆர்வமுள்ள மாணவாகள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு அலுவலக தொலைபேசி 0452-2370861 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.