செய்திகள்விருது | விழா | கூட்டம்
மதுரை அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் திரு.வி.க 139வது பிறந்த நாள் விழா
Madurai Ayyan Tiruvalluvar Literary Forum 139th birthday celebration of Mr.V.K

மதுரை அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் “தமிழ்த் தென்றல்” திரு.வி.க அவர்களின் 139வது பிறந்த நாள் விழா இன்று (26.08.2022) காலை 10 மணி அளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் என்.எம். மாரி தலைமை தாங்கி திரு.வி.க உருவப் படத்திற்கு மாலை அணிவித்தார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி.வரதராசன், பாவலர் இரா.இரவி, வழக்கறிஞர் இராம.வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மன்றப் புரவலர் அரிமா மகா.கணேசன், துணைச் செயலாளர்கள் கரு.ஆறுமுகம் – லெ.முருகேசன், துணைத் தலைவர்கள் டி.வி. அழகர் – போடி காமராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ப. பாண்டித்துரை, இல.வெள்ளைச்சாமி, ரெ.கார்த்திகேயன், ச.செல்வக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1