
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தேசிய மாணவர் படையினருக்கான பணிவாய்ப்புகள் பற்றிய பயிற்சி இன்று (01.09.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இந்த பயிற்சியில், இராணுவத்தில் சேர்வது பற்றிய விழிப்புணர்வு, அக்னி பாத் திட்டம் பற்றிய அறிமுகம் , இராணுவத்தில் பெண்கள் சேர்வது குறித்தும் மற்றும் அக்னி பாத் திட்டம் மூலம் பெண்களுக்கான இராணுவ பணி வாய்ப்பு ஆகியவை பற்றி கமாண்டிங் அதிகாரி ஆறுமுகம் மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தார்.
நடைபெற்ற இக்கூட்டத்தில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர், முதுகலை பொருளாதாரத்துறைப் பேராசிரியர் முத்துராஜா, அமெரிக்கன் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் பிரின்ஸ்.
மற்றும் மதுரைக்கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் கார்த்திகேயன், அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த முப்படைப்பிரிவு தேசிய மாணவர் படை மாணவர்கள், மீனாட்சி கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி, டோக் பெருமாட்டிக்கல்லூரி, மதுரைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படையினருக்கான பணிவாய்ப்பு பயிற்சி நிகழ்வில் 278 மாணவர்கள் ஆர்முடன் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பயிற்சி கூட்டம் இறுதியில், சிறப்பு விருந்தினர்களுடன் மாணவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அமெரிக்கன் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் பிரின்ஸ் சிறப்பாக செய்திருந்தார்.