மதுரை அன்சாரி நகரில் மத்திய பொது சுகாதார ஆய்வகத்திற்கான பூமி பூஜை
Bhoomi Pooja for Central Public Health Laboratory at Ansari, Madurai

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அன்சாரி நகரில் மத்திய பொது சுகாதார ஆய்வகம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் இன்று (01.07.2022) நடைபெற்றது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப்பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு புதிய நலவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்டலம் 3 வார்டு எண்.59 அன்சாரி நகர் 24 மணி நேர மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் (NருHஆ) சுமார் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் படவுள்ள மத்திய பொது சுகாதார ஆய்வகம் (Central Public Health Laboratory CPHL) கட்டுவதற்கான பூமி பூஜை மாண்புமிகு மேயர், ஆணையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.