செய்திகள்

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் திருச்சி கல்யாணராமனின் பிரகலாத சரித்திரம் சொற்பொழிவு

Trichy Kalyanaraman lecture event on behalf of Anugragam of Madurai Anush

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் மதுரை ஆண்டாள் புரம் வசுதாரா வளாகம் விஸ்வாஸ் கருத்தரங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி கல்யாணராமன் பிரகலாத சரித்திரம் என்ற தலைப்பில் பேசியதாவது் பிரகலாதனுக்கு நல்ல ஆசிரியர் அமைய வில்லை. ஆனால் கர்ப்பத்திலேயே நாரதர் ஆசிரியராக இருந்து நாராயண நாமத்தை உபதேசித்தார.

தாயின் கர்ப்பம் தான் ஒருவருக்கு முதல் பள்ளிக்கூடம். கர்ப்ப காலத்தில் தாய் நல்லதை கேட்க வேண்டும் அப்போது குழந்தை நல்லவனாக வளருவான். நமக்குத் தாய் முதல் குரு தந்தை இரண்டாவது குரு. பிரகலாதனுக்கு நல்ல தந்தை அமையாத போதும் குருவை நிந்திக்க வில்லை.

அறியாமை என்கிற இருளை போக்குகிற வர் குரு. வாழ்க்கை யில் ஒவ்வொருவரும் நல்ல குருவை பின்பற்ற வேண்டும். நமக்கு யார் கெடுதல் செய்தாலும் அவர்களுக்கு கேடு செய்யக் கூடாது. பிரகலாதனுக்கு நாரதர் நல்ல குருவாக அமைந்த தால்தான் எதையும் எதிர்கொள்ளும் சக்தி இருந்தது அவன் தாயிடத்தில் இருந்த போது நல்லதை கேட்டார்.

இந்த காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் நல்லதை கேட்பவர்களாக இருந்தால் தான் நல்ல குழந்தை பிறந்து சமுதாயத் திற்கு நல்லதை செய்வான். தாய் தான் ஒவ்வொருவருக்கும் முதல் குரு உடம்பு நன்றாக இருக்கும் போதே பகவான் நாமா சொல்ல வேண்டும். குக்கருக்கு கேரண்டி கொடுக்கிற உலகத்தில் குக்கரில் சமைக்கிற நமக்கு கேரண்டி கொடுப்பது இல்லை.

ஒவ்வொரு வரும் தினமும் காலை எழுந்தவுடன் இறைவன் பெயரைச் சொல்லி எழுந்திருக்க வேண்டும். எதிலும் ஈடுபாடு இருக்க வேண்டும் என்கிறார் சுவாமி சிவானந்தர். நாம் பிறவிப் பெருங்கடலை நீந்தி கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கை யில், எந்தச் செயலையும் பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்யக்கூடாது. எல்லாவற்றிலும் பக்தி இருக்க வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். அனுஷத் தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: