செய்திகள்

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கிருஷ்ண ஜாலம் சொற்பொழிவு

Krishna Jalam discourse by writer Indira Soundararajan on behalf of Madurai Anushta

மதுரை அனுஷத் தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் கிருஷ்ண ஜாலம் என்ற தலைப்பில் சொற்பொழிவு மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசியதாவது அஷ்டமி போன்ற நாட்களில் நாம் நல்ல செயல்களை செய்வது இல்லை. ஆனால் ஆவணி மாத அஷ்டமி சிறப்பான நாள். நமக் கெல்லாம் கிருஷ்ணன் என்ற அவதாரம் கிடைத்த நாள்.

கிருஷ்ணன் நீலமேக ஷாமண னாக பிறந்தான். உலகம் இறைவனின் படைப்பு இன்று நாம் விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உலகத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. இன்று கலியுகத்தில் அசுரன் தேவர்கள் கலந்து இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரிடத்திலும் அசுரத் தன்மை இருக்கிறது. உலகத்தில் ராம நாமாவும் கிருஷ்ண நாமாவும் நம்மை கடைத் தேற்றும் மந்திரங்கள். இந்த நாமத்திற்கு இணை உலகில் வேறு ஒன்றும் இல்லை. *ஓம் நமோ நாராயணா* *ஓம் நமச் சிவாயா* மந்திரம் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் உகந்த மந்திரம்.

குருவிடம் உபதேசம் பெற்று இதைச் சொல்ல வேண்டும். ராம நாமத்தை சொல்கிற போது எல்லா பயனையும் அடைகிறோம்.அதுபோல கோவிந்த நாமாவும் சிறப்பானது. எவன் ஒருவன் கோவிந்த நாமாவை சொல்கிறானோ அவனுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்கிறார் காஞ்சி மகா பெரியவர்.

கோவிந்த நாமாவை முதலில் சொன்னவன் இந்திரன். கிருஷ்ண நாமாவை சிந்திப்பது அவனது ஜாலத்தை சிந்திப்பது இரண்டு விதம். கிருஷ்ண னின் தந்திரம் தர்மத்தையும் சத்தியத்தையும் காப்பாற்றிய மந்திரம். கிருஷ்ணனின் லீலைகள் புத்திசாலித் தனத்திற்கு இலக்கணம். பகவத்கீதை என்ற பொக்கிஷம் நம்மாலே பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

கிருஷ்ண ஜெயந்தி அன்று சமந்தக மணி புராணத்தை கேட்பது படிப்பது மிக சிறப்பானது. ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ மகா பெரியவர் சமந்தக மணி புராணத்தை மூன்று மணி நேரம் சொல்லி இருக்கிறார். இவ்வாறு இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய் திருந்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: