அரசியல்செய்திகள்

மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள்

Mailbags printed with Tamil characters for the first time in Madurai postal lines

மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன்முறையாக தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இதுகுறித்து எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை கோட்ட அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழிகளான ஆங்கிலம், இந்தி மொழிகளே இதுவரை மத்திய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன்முறையாக தமிழ் மொழியில் வார்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள்’ தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சு.வெங்கடேசனின் இந்த பதிவுக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: