
மதுரை மாவட்டத்தல் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த கனமழையாலும் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் ஃஎக்கோ பூங்காவில் பல மரங்கள் சாய்ந்தன. மேலும் பூங்காவில் உள்ள இரும்பு பொம்மைகள் சேதமடைந்து கீழே விழுந்துள்ளன.
ஐ.ஏஸ்.ஓ – ISO சான்று பெற்ற பூங்காவில் சரியான பராமரிப்பு இல்லாமல் அதிக குப்பையும், மழைகாலத்தில் தண்ணீர் தாங்கியும் உள்ளது. இதனால் தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் சிரமமாக உள்ளன. பசுமை நிறைந்த இந்த பூங்காவை மாநகராட்சி ஆணையர் மிகவும் நன்றாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பழுதான உடற்பயிற்சி சாதனங்களை சீர்செய்து, தினமும் இசை ஒலி செய்தும் மேலும் பொலிவு பெற நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வேண்டுகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் தங்களின் வளர்ப்பு காய்களுடன் வருவதை தவிர்க்கலாமே. இந்த பூங்காவை பராமரிக்க பல தண்ணாவர்கள் முன்வரலாமே.