கிடா முட்டுபெட்ஸ்வீடியோ

மதுரையும் கிடா முட்டு தடையும் | நாட்டு கிடாய் அழிவை தடுக்க களம் அமைக்க கோரிக்கை

Madurai and Kida will be blocked

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இதுவரைக்கும் நம்ம சேனலை சப்கிரைபர் பண்ணாதவங்க. உடனடியா பன்னி ஊக்கம் கொடுங்க. நாம இந்த வீடியோவில் மதுரையில் முட்டு கிடா தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், களம் நடத்துவதற்கான காரணம் குறித்தும் பார்க்கப்போகின்றோம். வாங்க வீடியோவுக்குள் போகலாம்.

ஜல்லிக்கட்டைபோல் கிடா முட்டு சண்டைக்கும் தடை நீக்கப்படுமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது ? நாட்டு கிடாய்களை மீட்டெடுக்க வேண்டும் என்றால், அதற்கான கள விளையாட்டுக்கள் நிச்சயமாக நடைபெற வேண்டும்.

அப்படி நடைபெற்றால்தான், அதை வளர்க்கும் ஆர்வமும், அதன் மூலம் இனப் பெருக்கமும் அதிகரிக்கும். முட்டு கிடா போட்டி என்பது இன்றைக்கு நேற்றைக்கு நடந்தது அல்ல. ‘கிடா முட்டுக்கும்’ நெடிய வரலாறு உண்டு. இதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

அந்த காலத்தில் நாட்டு செம்மறி ஆடுகளை வளர்க்கும் விவசாயக் குடிகள், அதில் வீரிய மிக்க நாட்டு கிடாக்களைத் தேர்ந்தெடுத்து போட்டிக்கு விடுவார்கள். வெற்றிபெறும் கிடாக்களை இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்தினார்கள்.

நாட்டு கிடாக்களில் கமுதி, கம்பம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைகட்டி கருப்புக் கிடா, ராமநாதபுரம் கண் கருப்புக் கிடா மிக முக்கியமானவை. இன்றைக்கு இதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் காரணத்தால் நாட்டு செம்மறி ஆட்டு இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஜல்லிக்கட்டு’ நிகழ்ச்சியையும் தாண்டி, சில விளையாட்டுகள், பொங்கல் நெருங்கும் போதே, சூடுபிடித்து விடும். அதில் ஒன்று தான், “கிடா முட்டு’. பொதுவாக, கிடாக் கறிக்கும், கிடா கஞ்சிக்கும் தான், மதுரை வட்டாரம் “பேமஸ்’ என்பார்கள்;

ஆனால், அதையும் தாண்டி, “கிடா முட்டு’ விளையாட்டிற்கென, தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சில கட்டுப்பாடுகளும், கடுமையான விதிமுறைகளும், இது போன்ற விளையாட்டுகளை, திரைமறைவில் நடத்த காரணமாகிவிட்டதால், அதற்கான ரசிகர்களை உலகம் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் வீரசோழன், ராமநாதபுரம் கீழமாத்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தை பிறந்தால், “கிடா முட்டு’ களைகட்டும்.
“கிடா’ என்றால், ஏதோ கசாப்பு கடையிலிருந்து இழுத்து வரும் ஆடுகள் அல்ல; ஒவ்வொன்றும் “பாக்சிஸங்’ வீரரைப் போல், பிறவி முழுவதும் பயிற்சி பெறுபவை.

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடத்தப்படும் போட்டிகளில் ‘கிடா முட்டுக்கு தனித்துவம் உண்டு. இதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் மட்டும் கிட்டதட்ட 2 ஆயிரம் ‘கிடா முட்டு’ நாட்டு கிடாக்கள் வளர்க்கப்படுகின்றன.

முட்டு கிடா வளர்ப்பு என்பது கிராமத்தில் விவசாய வேளை பார்ப்பவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். கோடி கணக்கில் சம்பாரிக்கும் பங்களா வீட்டிலும் முட்டு கிடாக்கள் வளர்க்கம் பழக்கம் பரம்பரை பரம்பரையாக இன்றைக்கும் உள்ளது.

மதுரையில் ‘கிடா முட்டு’ நடக்காவிட்டாலும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்ட கிராமங்களில் நடக்கும் போட்டிகளுக்கு இந்தக் கிடாக்களை அதன் உரிமையாளர்கள் அழைத்துச் சென்று இந்த விளையாட்டை அழியாமல் உயிர்ப்புடன் இன்று வரை வைத்துள்ளனர்.

மதுரையில் கிடா சண்டை நிறுத்தப்பட்டதால் வீரியமிக்க கிடாக்களைக் கண்டறிய முடியாமல், நாட்டு செம்மறி ஆட்டு இனங்களில் நோய் வாய்ப்பட்ட இனங்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

தற்போது கச்சை கட்டி என்ற நாட்டு செம்மறி ஆடுகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. அதிலும் கீழக் கரிசல், செங்கிடா போன்ற இனங்கள் மிக அரிதாக உள்ளன. பொட்டு இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அழிவைத் தடுக்க ஒரே வழி… கிடா போட்டிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: