
1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 8வது தேசிய கைத்தறி நாளினை 07.08.2022 அன்று கைத்தறி தொழிலினை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின்பங்கினை கெளரவிக்கும் வகையிலும் கொண்டாடப்படவுள்ளது.
இதன்படி மதுரை மாவட்டத்தில் 8வது தேசிய கைத்தறி தின விழா மதுரை விஸ்வநாதபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஹாலில் ௦7.08.2022 அன்று நடைபெற உள்ளது.
இத்தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. நெசவாளர்களின் நலம் காக்கும் வகையில் மருந்து வகைகள் ஆய்வுகளுடன் கூடிய மருத்துவ முகாம் நடத்தவும் மற்றும் கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கும் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.
இத்தேசிய கைத்தறி தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஸ் சேகர் அவர்களால் 07,08.2022 அன்று காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டு மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. 8வது தேசிய கைத்தறி நாளுக்காக “MY DISTRICT MY HANDLOOM” – “எனது மாவட்டம் எனது கைத்தறி” என்ற ஹேஷ்டேக்கினை சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.