செய்திகள்

மதுரையில் 75 அடி நீள தேசிய கொடி ஏற்தியபடி பள்ளி மாணவர்கள் பேரணி

School students rally in Madurai hoisting a 75 feet long national flag

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுமார் 75 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமந்து நீண்ட தூர பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் மற்றும் தமிழக சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியா வேலுநாச்சியார், பாரத மாதா, மகாத்மா காந்தி, பகத்சிங் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பேரணியை முன்னின்று நடத்திச் சென்றது-

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரத் மாதா கி ஜே எனவும் வந்தே மாதரம் எனவும் முழக்கம் விட்டவாறு ஊர்வலமாக வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: