
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (05.09.2022) சென்னையில் நடைபெற்ற விழாவில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ. 1,000/- உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தையும், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 538 உயர்க்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் தலா ரூ. 1,000/- உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகம், ஏ.டி.எம்.அட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ”புதுமைப்பெண் திட்டம்” என்ற இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவியர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000/- உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து விண்ணப்பிக்கும் தகுதியான மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
மிகச்சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். இதனையடுத்து, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள 538 மாணவியர்களுக்கு உயர்க்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகம், வங்கி ஏ.டி.எம்.அட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மூ.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர்.பொன் முத்துராமலிங்கம், மீனாட்சி கல்லூரி முதல்வர் முனைவர்.சூ.வானதி, மாநகராட்சி மண்டலத் தலைவர் முகேஸ் சர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் நளினா ராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அணில் உட்பட அரசு அலுவலர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.