
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். 450 வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை டீன் ரத்னவேல் தலைமை தாங்கினார். மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம், முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன், முன்னாள் செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இச்சேவையினை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல், நடிகர் வையாபுரி பாராட்டினர்.