குற்றம்செய்திகள்போலீஸ்

மதுரையில் 419 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் | ஏழு பேர் கைது

419 kg Gutka products seized in Madurai Seven people were arrested

போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா, புகையிலை பொருட்கள் பள்ளி கல்லூரி மாணவரிடம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க காவல்துறை ஆணைய செந்தில்குமார் உத்தரவிட்டதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.அதோடு ஆங்காங்கே வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.

மதுரை கீரைத்துறை பகுதியில் பள்ளிகள் அருகே உள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையில், காவலர் பழனி குமார் மற்றும் கண்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வாழைத்தோப்பு சந்திப்பில் மூன்று பேர் வந்த ஆட்டோவை மரித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணைத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

இதனை அடுத்து விசாரணை செய்த பொழுது, சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த விஜய், அனுப்பானடி சூர்யா, ராமநாதபுரம் மாவட்டம் முப்பையூர் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும், பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மொத்தமாக வாங்கி மதுரையில் சில்லறையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இந்த புகையிலை பொருட்கள் விற்பனையில் சிந்தாமணியை சேர்ந்த அருண்குமார், மனைவி மலர், சண்முகம் என்பவரின் மனைவி மணிமேகலை, காமராஜர் புறம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி முனீஸ்வரி ஆகிய நான்கு பேர்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிய வந்தது.

இவர்களிடம் இருந்து சுமார் 200 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம், ஆட்டோ ஆகிய பறிமுதல் செய்த போலீசார் கைது செய்த நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போன்று மதுரை மேலநாப்பாளயம் தெரு பகுதியில் (TVS XL) இருசக்கர வாகனத்தில் 8 வெள்ளை சாக்கு பைகளுடன் வந்த ஜோராரராம், ஹரிஷ் யாதவ் ஆகிய இருவரை நிறுத்தி சோதனை செய்தார்கள் 419 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள் மற்றும் 45,000 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: