மதுரையில் 4 நாட்கள் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி 2022 | சு.வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
4 Days Integrated Agriculture Fair 2022 at Madurai | S. Venkatesan lit the lamp and inaugurated it

யுனைடெட் அக்ரிடெக் 2022 சார்பில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் 19.08.2022 முதல் 4 நாள்கள் நடைபெறுகிறது.
இங்கு 200க்கும் மேற்பட்ட ஸ்டாகளில் நவீன விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர்பாசனம், சூரிய ஒளி மின்சார பயன்பாடு, விவசாய இடுபொருட்கள், இயற்கை உரங்கள். விவசாயிகளின் நவீன உற்பத்தி பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிள்ளது.
கண்காட்சி நிர்வாக இயக்குநர் பாக்கிய ராஜ் கூறும்போது, தென் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இதுவாகும்.
இதில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் 200க்கும் மேற்பட்ட ஸ்டாகளில், நவீன விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர்பாசனம், சூரிய ஒளி மின்சார பயன்பாடு, விவசாய இடுபொருட்கள், இயற்கை உரங்கள், விவசாயிகளின் நவீன உற்பத்தி பொருட்கள் , விவசாய மூலப்பொருட்கள். இடம்பெற்றுள்ளது.
இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட அதிகளவில் வரவிருக்கும் காரணத்தால், வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் இதுகுறித்து மதுரை மாவட்ட விவசாயி சங்க செயலாளர் சோனை கூறும்போது, தென் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சி வாயிலாக, விவசாயிகன் தங்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாக வாங்கிப் பயனடையெல்லாம். கூடுதலாக அதற்கான மானிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.