செய்திகள்போலீஸ்

மதுரையில் 29 சவரன் நகை | ரூ.8.5 லட்சம் பணம் கொள்ளை | 13 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து மீட்ட போலீஸ்

29 Savaran Jewels in Madurai | Robbery of Rs.8.5 lakh The police caught the criminals in 13 hours

மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் (வயது 55) என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூலை 2ம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார்.

அதன் பிறகு ஜூலை – 3 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் உள்ள இருந்த லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி விரைந்து குற்றவாளிகளை பிடிக்க உதவி ஆணையர் ரவீந்திர பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அமலநாதன் மற்றும் பன்னீர்செல்வம், தலைமை காவலர்கள் ஜெகதீசன், சுந்தரம் அடங்கிய தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை எல்லீஸ் நகர்என்பது பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் கணேசன் என்பது தெரிய வந்தது.

அப்போது எல்லீஸ் நகர் பகுதியில் பதுங்கி இருந்த பாண்டியராஜன் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் சம்பந்தப்பட்ட வீட்டில் நாங்கள் இருவரும் தான் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தோம் என ஒப்புக் கொண்டனர். மேலும் அவரிடம் இருந்து 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 29 சவரன் நகையும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாதி உள்ள கணேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் சம்பவம் நடந்து 13 மணி நேரத்திற்குள் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மதுரை ஆணையாளர் செந்தில்குமார் வெகுவாக பாராட்டினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: