
மதுரை, மேலஅனுப்பானடியில் வசித்து வரும் முத்து என்ற கொரில்லாமுத்து, ஆண், வயது 45. இவர் கடந்த 02.06.2022ம் தேதி தனது கூட்டாளிகளுடன்கள்ளச்சந்தையில் சுமார் 21,150 கிலோ ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் காவலடைப்பு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையில் சரித்திர பதிவேடு எண்:10 /2017துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
மேலும் இவர் மீது ஏற்கனவே சுமார் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தில் வழக்கு மற்றும் சுமார் 15,950 கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே இவருடைய அத்தகைய கள்ளச்சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குநர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் மதுரை அவர்களது அறிவுரையின் படியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் 30.06.2022 அன்றைய உத்தரவின் பேரில், 01.07.2022ம் தேதி அன்று கள்ளசந்தைக்காரர் என்று இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.