செய்திகள்

மதுரையில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு 01.07.2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல்
ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2021 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

NEFT மூலம் தொழிற்பள்ளி பணம் (விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம்) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து Transfer செய்யப்பட வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் எந்த தொழிற்பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை Bank Statement-ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து RTGS/NEFT மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள Prospectus-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2021.இதற்கு பின் பெறப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம். மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் தொலைபேசி எண்: 0452-2906200 மதுரை. மற்றும் E-mail ID: rjdmdu@gmail.com மின்னஞ்சல் வாயிலாக அணுகலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: