செய்திகள்

மதுரையில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் அ.சுதா்சன் சேமித்த 611 ரூபாயை கலெக்டரிடம் வழங்கினார்

A. Sudhasan, a 2nd class student in Madurai handed over Rs. 611 saved to the Collector

மதுரையில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன், இன்று மதுரை கலெக்டரை தனது தந்தையுடன் நேரில் சந்தித்து தான் சேமித்துவைத்திருந்த 611 ரூபாயை இலங்கை வாழ் தமிழுருக்காக வழங்கி ஆச்சர்யம் அடையவைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ மரு.எஸ்‌.அனீஷ்‌ சேகர்
அவர்களிடம்‌ மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்‌ வசிக்கும்‌ இரண்டாம்‌ வகுப்பு மாணவன்‌ செல்வன்‌.அ.சுதா்சன்‌ அவர்கள்‌ நேரில்‌ சந்தித்து இலங்கை வாழ்‌ தமிழர்‌ நலனுக்காக தனது உண்டியல்‌சேமிப்பு ரூ.611 மற்றும்‌ அவரது தந்தை தஜி.அசோக்குமார்‌ ‌(மினரல்‌ வாட்டர்‌ வினியோகம்‌) ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.600 என மொத்தம்‌ ரூ.1,211-யை தமிழ்நாடு முதலமைச்சர்‌ பொதுநிவாரண நிதிக்கு வரைவு காசோலையை (9-5-2022) வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்‌.அனீஷ்‌ சேகர் சிறுவன் அ.சுதர்சன் மற்றும் அவரது தந்தையார் அசோக்குமார் ஆகியோரை வெகுவாக பாராட்டினார். இந்த சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: