
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மஹாலில்(18.08.2022) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற் விழாவில் 1,010 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் வழங்கினார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னகரம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற விழாவில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞசல் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளைச் சார்ந்த 1,010 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாக்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.