செய்திகள்மாநகராட்சி

மதுரையில் 10 & 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவுப்பரிசினை மேயர் வழங்கினார்

Mayor presents memento to students who scored highest marks in class 10 & 12 in Madurai

மதுரை மாநகராட்சி சின்னக்கடைத் தெருவில் உள்ள மாநகராட்சி மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவுப்பரிசினை மேயர் வ.இந்திராணி (12.08.2022) வழங்கினார்.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து திறன் மேம்பாடுகளில் சிறந்து விளங்கிட திட்டங்களை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மதுரை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கௌரவிக்கும்விதமாக மாசாத்தியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் அதிகப் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவுப்பரிசினை மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையினை பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: