கலெக்டர்செய்திகள்

மதுரையில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் ஆய்வு

Study of the Joint Secretary for Immigration Welfare on the welfare of Tamils living abroad in Madurai

வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னை கத்திப்பாரா ஹோட்டல் லீ மெரிடியன் இல் ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு” என்ற மாநாட்டை கடந்த 26.05.2022 அன்று தொடக்கி வைக்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் (Protector General of Emigrants) பிரம்ம குமார் சென்னை வந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (28.05.2022) புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார் மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்கள் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் சட்ட விரோதமாக செயல்படும் இல்லாமல் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரமப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை BOI/FRRO ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள் மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
a
இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852, 5610/1337, மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் (Protector General of Emigrants) பிரம்ம குமார் என தெரிவித்துள்ளார்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: