
மதுரை சிந்தாமணி ரோட்டின் அருகே மாடசாமி தெருவில் குடியிருக்கும் பன்னீர்செல்வம் மகன் லட்சுமணன். இவர் தனது வீட்டின் முன்பு லோடு வேன் டாட்டா ஏஸ் TN-58 /AC- 3452 என்னுடைய வாகனத்தை நிறுத்தி இருந்தார்.
இரவு தூங்கச் சென்றவர் காலையில் எழுந்து பார்த்ததும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சடைந்தார் உடனே கீரைத்துறை குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் டெல்லா பாயிடம் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்து அங்கு வைக்கப்பட்டிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் வாகனத்தை திருடிய மர்ம கும்பல் விருதுநகர் அருகே தனித்தனியாக பிரித்து விற்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனத்தை திருடி சென்ற விருதுநகர் மாவட்டம், கொசு குண்டு பகுதியை சேர்ந்த குமாரண்டி மகன் ரவிக்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவர் திருடி சென்ற TATA ACE வாகனத்தை கைப்பற்றினர்.
மதுரையில் லோடுவேன் திருடு போன நான்கு மணி நேரத்தில் திருடியவரை கைது செய்து லோடு வேனை கைப்பற்றிய தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினார்.