கலெக்டர்செய்திகள்

மதுரையில் வாடகை வீட்டை காலி செய்ய மறுப்பு | மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு

Refusal to vacate house for rent in Madurai | Madurai Collector's office agitated by attempt to set fire to an old man

மதுரை கரிமேடு பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா. இவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு சில வருடங்களுக்கு முன்பாக அழகுராஜா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அழகுராஜா நடவடிக்கையில் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் தயவுசெய்து எனது வீட்டை காலி செய்து தாருங்கள் என பல முறை சொல்லியுள்ளார். இருப்பினும் கூட அழகுராஜா காலி செய்ய முடியாது என்று வயதான தம்பதிகளை அச்சுறுத்தி உள்ளார்.

இதனால் மனம் உடைந்த சுப்பையா தனது மனைவியுடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூத்த குடிமக்களான கணவன், மனைவி கண் முன்னே தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமானது மனு கொடுக்க வந்த சக மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: