செய்திகள்

மதுரையில் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனை

Minister Mr. P. Murthy's advice regarding the sale of vegetables and fruits by vehicles in Madurai

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் முழு ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆணையாளர் ச.விசாகன் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (29.05.2021) ஆலோசனை மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்காக மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை, விவசாயத் துறை ஆகிய துறைகளின் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதிகளில் வழங்கப்படும்காய்கறி வாகனங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அனைவருக்கும் காய்கறிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். பெரிய வார்டுகளுக்கு கூடுதலாக காய்கறி வாகனங்களை இயக்க வேண்டும். மதுரை மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை ஆகிய வாகனங்களை ஒன்றிணைத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பகுதிகளாக பிரித்து விற்பனை செய்ய வேண்டும்.

காய்கறிகள் தொடர்பாக எவ்வித புகார்களுக்கும் இடமில்லாமல் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்போர் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவைப்படுவோர்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய வேண்டும். நடமாடும் காய்கறி வாகனங்களில் செல்பவர்கள் ஒவ்வொரு தெருகளிலும் குறிப்பிட்ட இடத்தில் நின்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக மதுரை மாநகராட்சியில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து வரும் காய்கறிகள் தொடர்பாக வரப்பெற்ற கோரிக்கை குறித்தும், கோரிக்கைகள் நிறைவேற்றியது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் காய்கறிகள் தேவைக்குறித்து தெரிவிக்கும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பகுதிகளுக்கு காய்கறிகள் வாகனங்களை அனுப்புமாறு கூறினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சங்கீதா, நகரப்பொறியாளர் திரு.அரசு, உதவி ஆணையாளர்கள் சண்முகம், பிரேம்குமார், சுரேஷ்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) தசையத் முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: