மதுரையில் வரும் 30ந் தேதி அரசு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் | விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி செப்.15
Government Pensioners Grievance Redressal Day meeting on 30th in Madurai Last date for submission of applications is September 15

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆனீஷ் சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள்குறை தீரக்கும் கூட்ட அரங்கில் வருகிற 30.09.2022 – ம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கீழ்கண்ட விபரக் குறிப்புகளுடன் 15.09.2022 – ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மனுவின் மீது ஓய்வூதியர் குறை திக்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும்.
1. விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
2. ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும்.
3. ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விபரம் ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
4. ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விபரம் குறிப்பிடப்பட வேண்டும்.
5. ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விபரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
6. ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்னுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பிற மாவட்டங்களைச் சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீாக்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசு துறைகளிலிருந்து ஓய்வூதியப் பிரேரணை அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் விவாதித்து குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மதுரை மாவட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளார்கள்.
எனவே, 30.09.2022 – ல் நடைபெறவுள்ள ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு 15.09.2022 – க்குள் மனு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள், அன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.