செய்திகள்

மதுரையில் வரும் 29ந் தேதி முதல் 30ந் தேதி வரை அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும்‌ கடன்‌ மேளா

Credit Mela will be held in Madurai from 29th to 30th in all cooperative societies

மதுரை மாவட்டத்தில்‌ செயல்படும்‌ கூட்டுறவு சங்கங்கள்/வங்கிகள்‌ மூலமாக பயிர்க்கடன்‌, மத்தியகாலக்‌ கடன்களான கால்நடைவளர்ப்பு மற்றும்‌ கால்நடை பராமரிப்புக்கடன்‌, மாற்றுத்திறனாளிக்கடன்‌, ஆதரவற்ற விதவை / கணவனால்‌ கைவிடப்பட்டவர்களுக்கான கடன்‌, டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, மகளிர்‌ சுய உதவிக்குழு கடன்கள்‌ மற்றும்‌ நகைக்கடன்கள்‌ வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்‌ பொதுமக்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ 29.08.2022 மற்றும்‌ 30.08.2022 ஆகிய தேதிகளில்‌ கடன்‌ வழங்கும்‌ அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும்‌ “கடன்‌ மேளா”” நடைபெறவுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌ தங்களுக்கு அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்‌, நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌, தொடக்க வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி வங்கிகள்‌, ஆகியவற்றை அணுகி பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: