மதுரையில் வரும் 26ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Private sector employment camp on 26th in Madurai

தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறையின் சார்பாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவதுவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முகாம் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, வருகின்ற 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி படித்த வேலைநாடூநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவாங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள்.
குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும்,
இம்முகாம் மூலம் தனியார்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும்பாதிக்கப்படாது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெநி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர்.கா.சண்முகசுந்தர் தெரிவிக்கின்றார்.