செய்திகள்

மதுரையில் வருகின்ற 22.05.2022-அன்று மினிமாரத்தான் போட்டி | முதல் பரிசு ரூ.20,000

Minimarathan competition coming on 22.05.2022 in Madurai | The first prize is Rs.20,000

மாபெரும் மினிமாரத்தான் போட்டி வருகின்ற 22.05.2022-அன்று காலை 06.00 மணிக்கு திருமோகூர் சாலையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பில் நடைபெற உள்ளது.

 மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல்நிலையம் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சம்மந்தமாக 10 ஆயிரம் நபர்கள் பங்குபெரும் மாபெரும் மினிமாரத்தான் போட்டி வருகின்ற 22.05.2022-அன்று காலை 06.00 மணிக்கு  திருமோகூர் சாலையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பில் நடைபெற உள்ளது.

இந்த மினிமாராத்தான் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 14 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களது பெயர்களை www.maduraimarathon2022.in-என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொண்டு போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மினிமாரத்தான் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

பரிசுகள் ஆண்கள் பெண்கள்
1 ரூ.20,000/- ரூ.20,000/-
2 ரூ.10,000/- ரூ.10,000/-
3 ரூ.5,000/- ரூ.5,000/-
4 முதல் 13 (10 நபர்களுக்கு) ரூ.1,000/- ரூ.1,000/-
14 முதல் 63 (50 நபர்களுக்கு) டி.சர்ட் மற்றும் மெடல் சேலை மற்றும் மெடல்

மேலும், இப்போட்டியில் கலந்து கொள்ளுபவர்களில் லக்கி வின்னர் ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிள்ள சைக்கிள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

 

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: