செய்திகள்வேலை வாய்ப்பு

மதுரையில் வருகின்ற 12.08.2022 அன்று தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் | தகுதியான இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு

Employment camp on behalf of the private sector on 12.08.2022 in Madurai Eligible youth are invited to attend

தமிழக அரசின்‌ வேலைவாய்ப்புத்துறையின்‌ சார்பாக. மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ தனியார்துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுவதற்கான முகாம்‌ நடைபெற்று வருகிறது.

அதனைத்‌ தொடர்ந்து, வருகின்ற 12.08.2022 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறையில்‌ வேலைவாய்ப்புபெறுவதற்கான முகாம்‌ நடைபெற உள்ளது. இம்முகாமில்‌ தனியார்‌ முன்னணி
நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும்‌ இளைஞர்களைத்‌ தேர்வு செய்ய உள்ளனர்‌.

இம்முகாமில்‌ பத்தாம்‌ வகுப்பு முதல்‌ பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள்‌, ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர்‌ மற்றும்‌ டிப்ளமோ நர்சிங்‌, பிசியோதெரபி படித்த வேலைநாடுநர்கள்‌ கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்‌ துறை
நிறுவனங்களில்‌ பணி நியமனம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. வேலைநாடுநர்கள்‌ மற்றும்‌
வேலையளிக்கும்‌ நிறுவனங்கள் http;//www.tnprivatejob.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ தங்களது சுயவிவரங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்து பயன்பெறலாம்‌.

இம்முகாமில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ள வேலைநாடுநர்கள்‌. தங்களது கல்விச்சான்றிதழ்கள்‌, குடும்ப அடையாள அட்டை, ஆதார்‌ அட்டை மற்றும்‌
புகைப்படத்துடன்‌ 12.08.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு
மதுரை கோ.புதாரில்‌ உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி
வழிகாட்டும்‌ மையத்திற்கு நேரில்‌ வரவும்.

உரிய நபர்கள் இம்முகாமிற்கு வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை
பயன்படுத்திக்‌ கொள்ளுமாறும்‌, இம்முகாம்‌ மூலம்‌ தனியார்துறை நிறுவனங்களில்‌
கவே லைய்ப்பு பெறுவதணால்‌ வேலை வாய்ப்பு அனுவலகப்‌ பதிவு எவ்விதத்திலும்‌
பாதிக்கப்படாது எனவும்‌ மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி
வழிகாட்டும்‌ மைய துணை இயக்குநர்‌ டாக்டர்.கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: