செய்திகள்

மதுரையில் ரூ.8,90,000 மதிப்புள்ள செயற்கை கலர்‌ அப்பளம் பறிமுதல் ; கடைக்கு சீல்

Confiscation of Rs. 8,90,000 worth of artificial color added waffles in Madurai

மதுரை, பிப்,02 / 2022

உணவு பாதுகாப்பு ஆணையர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, மாவட்ட கலெக்டர்‌ உத்தரவின்படி, மதுரை மாவட்ட நியமன அலுவலர்‌ தலைமையில்‌ உணவு பாதுகாப்பு அலுவலர்கள்‌ கொண்ட குழுவினரால்‌ அரசால்‌ தடை செய்யபபட்ட செயற்கை வண்ணம்‌ சேர்க்கப்பட்ட கலர்‌ அப்பளம்‌, தயாரிப்பு மற்றும்‌ விற்பனை செய்யும்‌ இடங்களில்‌ ஆய்வு ‘மேற்கொள்ளப்பட்டது.

அதன்‌ அடிப்படையில்‌ இன்று, தங்கமணி நகர், அருள்தாஸ்புரம்‌, தத்தனேரி என்றபகுதியில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ வத்தல்‌ கம்பெனியில் ஆய்வு செய்தபோது செயற்கை வண்ணம்‌ சேர்க்கப்பட்ட 850 மூட்டைகள்‌ இருந்தது கண்டறியப்பட்டது. அதன்‌ மொத்த எடை 21,2501. அதன்‌ தோராயமாக மதிப்பு ரூ.8,50,000/- ஆகும்.

மேலும்‌ அதன்‌ தொடர்‌ நடவடிக்கையாக மேற்படி நிறுவனத்தின்‌ விற்பனை நிலையமான தனியார்‌ கம்பெனி குலமங்கலம்‌ ரோடு, செல்லூர்‌, மதுரை-625002 என்ற பகுதியில்‌ செயற்கை வண்ணம்‌ சேர்க்கப்பட்ட கலர்‌ அப்பளம்‌ 1000 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. அதன்‌ தோராயமாக மதிப்பு ரூ.40,000/- ஆகும்.

மேற்கண்ட செயற்கை வண்ணம்‌ சேர்க்கப்பட்ட அரசால்‌ தடை செய்யப்பட்ட கலர்‌ அப்பளங்கள்‌ சட்ட ரீதியான உணவு மாதிரிகள்‌ எடுக்கப்பட்டு, அதை கிண்டி, சென்னை:32 உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்படுகிறது.

உணவு பகுப்பாய்வு முடிவு வரும் வரை மேற்கண்ட உணவு தயாரிப்பின்‌ ஒரு பகுதியில்‌ வைத்து சீலிடப்பட்டது. அதற்குண்டான கைப்பற்றுகை நோட்டீஸ்‌ தரப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவு வரும்வரை உணவு தயாரிப்பாளர்‌ அதன்‌ பொறுப்பாளராக இருந்து அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவரின்‌ ஈப்ட கடமையாகும்‌ என்பது அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: