மதுரையில் ரூ.47.72 கோடி மதிப்பில் தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் கலாச்சார மைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு
Study on the construction work of the cultural center being built at Tamukkam Maidan at a cost of Rs.47.72 crores in Madurai.

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் (01.09.2022) ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலாச்சார மைய கட்டிடம், வாகனம் நிறுத்தும் தளங்கள், மழைநீர் வடிகால், மின்விளக்குகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாநகராட்சி ஆதிமூலம் பிள்ளை ஆரம்பபள்ளியில்; கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம், மண்டலம் 3 வார்டு எண்.60 எல்லீஸ் நகரில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் செயலாக்க மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் முறையினையும், மண்டலம் 5 வார்டு எண்.74 பசும்பொன்நகர் இராஜாஜி தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் சேரும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுவதையும், அந்த உரத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள மாடித் தோட்டத்தினையும் பாHவையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் சேகிக்கப்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் இடங்கள், பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டனர். பசும்பொன்நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்கப்படுவதை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வில் துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் லெட்சுமணன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள், சுரேஷ்குமார், சையத் முஸ்தபா கமால், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள், உதவிப்பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.