அமைச்சர்செய்திகள்

மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் | அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

Construction work of Muthamizharinjar Artist Memorial Library at an estimated cost of Rs. 114 crore in Madurai Interview with Minister EV Velu

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை இன்று (19.05.2022) பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலுஅசெய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சலால் மதுரை மாவட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, புதுநத்தம் சாலையில் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டில் 2 இலட்சம் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டுவதற்கு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நூலகத்தில் கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய தினம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவிகித பணிகள் வருகின்ற ஜீன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

அடுத்தக்கட்டமாக நூலக கட்டடத்தின் உள்கட்டமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மதுரை மாவட்டத்தில் இப்படியொரு நூலகம் அமைவதால் தென் மாவட்டமான கன்னியாகுமரி முதல் மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பட்டதாரிகளுக்கும் இந்த நூலகம் சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

மேலும், தமிழரின் கலாச்சார நகரமாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் உள்ள கீழடி போன்ற பகுதிகளில் பண்டைகால வரலாற்றை நினைவுகூர்வதற்கான அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டையகால வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் அரியவகை பொருட்களைஇந்நூலகத்தில் இடம்பெற செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சரால் தேர்தல் அறிவிக்கையில், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.அதன்படி, ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்றத்தில் நடத்தப்பட்டு, தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம்ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை என்ற நிலை வந்தால்தான் தமிழ்நாட்டு மாணவ, மாணவியர்களின் நலன்பாதுகாக்கப்படும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் என அமைச்சர் எ.வ.வேலுதெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் திரு.எ.வ.வேலு, அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மதுரை ஒத்தக்கடை அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.50.60 கோடி மதிப்பீட்டில் திருச்சி – மதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு வரையில் 5 கி.மீ நீளம் இருவழி சாலையை நான்கு வழிசாலையாக மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர்இந்திராணி பொன்வசந்த், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்றஉறுப்பினர்கள் கோ.தளபதிஅவர்கள் (மதுரைவடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரைதெற்கு, மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை க(ம) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பாலமுருகன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: