செய்திகள்

மதுரையில் ரயிலில் அடிபட்டு கால் துண்டான தெரு நாய் | விரைந்து காப்பாற்றிய சாய் டிரஸ்ட்மயூர் ஹசிஜா

A street dog was hit by a train in Madurai Sai Trustmayor Hasijah who is Vinaitu Kaipaartiya

மதுரை – ஆண்டாள்புரம் போடி லயன் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் தெருநாய் ஒன்று ரயில் சக்கரத்தில் சிக்கி விழுந்தது. இதில் பலத்த காயமுற்ற அந்த நாய் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

அப்பகுதி மக்கள் நிறுவனர் சாய் டிரஸ்ட்மயூர் ஹசிஜா என்பவருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த தெருநாய்க்கு தினசரி உணவு அளித்து வரும் அதே பகுதியை சேர்ந்த வள்ளி. நாயின் முன் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டதைக் கண்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.

காயமடைந்த நாய்க்கு உதவ இடத்திற்கு விரைந்து வந்த மயூர் ஹசிஜா. அந்த நாயை முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.

கால்நடையை தெருவில் அலைய விடுவது இது யாருடைய தவறு ? பகுதிக்கும் ரயில் பாதைக்கும் இடையே ஒரு பிரிவு உள்ளது. சில குடியிருப்பாளர்கள் தங்கள் வசதிக்காக பிரிவினைக்கும் ரயில் பாதைக்கும் இடையே ஒரு பாதையை உருவாக்கியுள்ளனர்.

அப்பாவி விலங்குகள் அதற்கான விலையை கொடுக்கின்றன. ரயில்வே நிர்வாகம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனிதர்களும். விலங்குகளும் செல்லாத அளவிற்கு தடுப்புகளை அமைத்து தந்தாலும் அதை துளையிட்டு இவர்கள் வசதிக்காக செல்வதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

விலங்குகள் மற்றும் இன்றி மனிதர்களும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து. தடுப்புகளை ஏற்படுத்தி மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலரின் கோரிக்கையாகவே உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: