செய்திகள்விருது | விழா | கூட்டம்

மதுரையில் முத்தூட் நிதி நிறுவனம் சார்பில் ஆதரவற்ற தாய்மார்களின் மகள்களுக்கு திருமண பரிசு வழங்கும் நிகழ்ச்சி

In Madurai, Muthoot Niti Foundation organized a program of giving wedding gifts to the daughters of destitute mothers

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் முத்தூட் நிதி நிறுவனம் சார்பில் ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் மகள்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்தூட் குழுமத்தின் சார்பில் சமூக பொறுப்பு திட்ட முன்னெடுப்பாக விதவைகளின் மகள்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் திருமண நிதி உதவிக்காக விண்ணப்பித்த 50க்கும் மேற்பட்ட விதவை தாய்மார்களின் மகள்களுக்கு இந்த நிகழ்ச்சியில் திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.

மேயர் இந்திராணி பொன்வசண் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் நிதி உதவிக்கு விண்ணப்பித்த புதுமணத் தம்பதிகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான காசோலைகளை வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் முத்தூட் நிதி நிறுவன கோட்ட நிர்வாக மேலாளர் பி.விஜயகுமார் மற்றும் ஊரக வாழ்வாதார திட்ட மாவட்ட அலுவலர் காளிதாஸ், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் ஜெயபாண்டி மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய சங்க கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: