மதுரையில் மீன், இறைச்சி விற்பனைக்கு அடையாள அட்டை; வீடுகளுக்கு சென்று வழங்க மட்டுமே அனுமதி
Madurai Fish and Goat Meat Market News

மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று பரவலின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழி காட்டுதலின்படி தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாளர்மைச் சட்டத்தின் கீழ், முழுனரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கினை 07.06.2021 முதல் 14.06.2021 காலை 06.00 மணி வரை, சிலதளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் பொறுத்தவரை கீழ்வரும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
மீன் சந்தைகள்:
மீன் சந்தைகள் திறந்த வெளியில் இரவு 12.00 மணி முதல் காலை 05.00 மணி வரை மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை.
மீன் சந்தைகளிலிருந்து சில்லரை வியாபாரிகள் மற்றும் முகவர்கள் மூலமாக வீட்டிற்கே சென்று மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதற்கான அடையாள அட்டை மதுரை மாநகராட்சி அலுவலகத்தை அணுகிப்பெற்று கொள்ளலாம்.
மீன் சந்தைகளில் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும். சில்லரை விற்பனை கடைகள் திறக்க அனுமதி இல்லை.
இறைச்சி சந்தைகள்:
இறைச்சி கூடங்கள் இரவு 12.00 மணி முதல் காலை 05.00 மணி வரை மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை.
இறைச்சி கூடங்களில் சில்லரை வியாபாரிகள் / முகவர்கள் மூலமாக வீட்டிற்கே சென்று மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதற்கான அடையாள அட்டை மதுரை மாநகராட்சி அலுவலகத்தை அணுகிப்பெற்று கொள்ளலாம்.
இறைச்சி கூடங்களில் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும். சில்லரை விற்பனை கடைகள் திறக்க அனுமதி இல்லை.