கலெக்டர்செய்திகள்விவசாயம்

மதுரையில் மீன்வள மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

Invitation to apply for grants for ornamental fish rearing project under Fisheries Development Scheme in Madurai

மதுரை மாவட்டத்தில்‌, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (PMMSY) 2021. 22-ம்‌ ஆண்டிற்கு கொல்லைப்புற / புறக்கடை அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல்‌ திட்டம்‌, நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல்‌ திட்டம்‌, ஒருங்கிணைந்த அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல்‌ திட்டம்‌, அலங்கார மீன்விற்பனை அங்காடிகள்‌ அமைத்தல்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல் படுத்தப்படவுள்ளது.

அ) கொல்லைப்புற / புறக்கடை அலங்கார மீன்கள்‌ வள௱த்தெடுத்தல்‌ திட்டம்‌, (Backyard Ornamental Fish Rearing Unit‌) பொதுப்பிரிவில்‌ 10-அலகுகள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவில்‌ 3 – அலகுகள்‌ மற்றும்‌ மகளிர்‌ பிரிவில்‌ அலகுகள்‌ ஆக மொத்தம்‌ 17-அலகுகள்‌ இலக்காக நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும்‌ செலவினத்தொகை ரூ.3,00,000/-ல்‌ 40 சதம் மானியமாக ரூ.1,20,000/- மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவு மற்றும்‌ மகளிர்‌ பிரிவு பயனாளிகளுக்கு 60 சதம் மானியமாக ரூ.1,80,000/- வழங்கப்படும்‌.

ஆ) நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல்‌ திட்டத்தில்‌ (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில்‌ 3-அலகுகள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவில்‌ 1- அலகு மற்றும்‌ மகளிர்‌ பிரிவில்‌ 1-அலகு ஆக மொத்தம்‌ 5-அலகுகள்‌ இலக்காக நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும்‌ செலவினத்தொகை ரூ.8,00,000/-ல்‌ 40 சதம் மானியமாக ரூ.3,20,000/- மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவு மற்றும்‌ மகளிர்‌ பிரிவு பயனாளிகளுக்கு 60 சதம் மானியமாக ரூ.4,80,000/- வழங்கப்படும்‌.

இ) ஒருங்கிணைந்த அலங்கார மீன்கள்‌ வளர்த்தெடுத்தல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (Integrated Ornamental Fish Rearing Unit (Breeding and Rearing fot Fresh Water Fish) ஆதிதிராவிடர்‌ பிரிவில்‌ 1- அலகு மற்றும்‌ மகளிர்‌ பிரிவில்‌ 19-அலகுகள்‌ ஆக மொத்தம்‌ 20-அலகுகள்‌ இலக்காக நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. மகளிர்‌ பிரிவு மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும்‌ செலவினத்தொகை ரூ.25,00,000/-ல்‌ 60 சதம் மானியமாக ரூ.15,00,000/- வழங்கப்படும்‌.

ஈ) அலங்கார மீன்விற்பனை அங்காடிகள்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ (Construction of fish Kiosk inculdinng Kiosks of aquarium / ornaemental ) பொதுப்பிரிவில்‌ 1-அலகு மற்றும்‌ மகளிர்‌ பிரிவில்‌ 1-அலகு ஆக மொத்தம்‌ “அலகுகள்‌ இலக்காக நிர்ணயம்‌ செய்யப்பட்டூள்ளது.

பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும்‌ செலவினத்தொகை ரூ.10,00,000/-ல்‌ 40 சதம் மானியமாக ரூ.4,00,000/- மற்றும்‌ மகளிர்‌ பிரிவு பயனாளிகளுக்கு 60 சதம் மானியமாக ரூ.6,00,000/- வழங்கப்படும்‌.

மேற்குறிப்பிட்டுள்ள 4-ஜிட்டங்களில்‌ பயன்பெற விரும்பும்‌ பயனாளிகள்‌ மற்றும்‌ மீன்வளர்ப்பில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ 15 தினங்களுக்குள்‌ மதுரை, மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநரா அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவம்‌ பெற்று உரிய ஆவணங்களுடன்‌ (ஆதார்‌ கார்டு, ரேஷன்‌ கார்டூ, பட்டா, சிட்டா அடங்கல்‌, நிலத்தின்‌ வரைபடம்‌) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டால்‌, மூப்பு நிலை மற்றும்‌ தகுதியின்‌ அடிப்படையில்‌ பயனாளிகள்‌ தோர்வு செய்யப்படுவார்கள்‌.

திட்டங்களில்‌ பயன்பெற விரும்புவோர்‌ மேலப்பொன்னகரம்‌ 5-வது தெரு, 2-வது மாடி பாண்டியன்‌ டவர்ஸ்‌, ஆரப்பாளையம்‌ என்ற முகவரியில்‌ இயங்கிவரும்‌ மதுரை, மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்‌. 0452-2347200 தொடர்பு கொள்ளலாம்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: