
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காவல்துறை துணை ஆணையாளர் மோகன்ராஜ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டங்கள் மீண்டும் நடத்திட வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் காவல்துறையின் சீரிய சேவைகள் மற்றும் செயல்பாடுகளை நன்கு அறிவதோடு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும்.
மேலும் செல்போன் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள காலகட்டத்தில் காவல் உதவி, எஸ்ஓஎஸ் போன்ற மொபைல் ஆப்கள் குறித்து நேரில் விளக்கினால் பொதுமக்கள் பலர் பயனடைவர்.
அதேபோல் வெகுஜன சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் காவல்துறையின் தொடர் செயல்பாடுகள் மற்றும் மீம்ஸ் வடிவில் விழிப்புணர்வுகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை ஏற்று விரைந்து செயல்படுத்துமாறு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோரிக்கை மனு வழங்கப்பட்டபோது சமூக ஆர்வலர் உதவும் உள்ளம் பெரியதுரை, வழிகாட்டி மணிகண்டனுடன் உடனிருந்தார்.