செய்திகள்

மதுரையில் மருந்தக உரிமையாளர்கள் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

Drug awareness rally on behalf of pharmacy owners in Madurai

தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் ஒரு வாரம் வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

போதை பொருள்களுக்கு எதிராகவும், போதை பொருள் பயன்பாட்டின் தீமையை எடுத்துக்கூறும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், பெஸ்ட் மணி கோல்டு பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமுக்கம் மைதானம் தொடங்கி கோரிப்பாளையம் சிக்னல், அரசு இராஜாஜி மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பேரணியானது நிறைவு பெற்றது.

பேணியில் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பினர்.

இந்த பேரணியில் பெஸ்ட் மணி கோல்ட் நிர்வாக இயக்குனர் ஜெகநாத் மிஸ்ரா,மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட மருந்தக விற்பனை சங்க தலைவர் கணேசன் பொதுச் செயலாளர் சரவணன், நிர்வாக செயலாளர் பிச்சைமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: