கொலை | தற்கொலை | திருட்டுசெய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறை

மதுரையில் மது குடிக்க பணம் கேட்ட மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர்

In Madurai, parents strangled their son to death after asking him for money to drink alcohol

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 56) – குருவம்மாள் (வயது 54) தம்பதிகள் வீட்டின் அருகே வடைக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் மாரி செல்வம் (வயது 25) தொழில்கல்வி படிப்பில் இடைநிற்றலில் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளான மாரிச்செல்வம் குடிப்பதற்காக பணம் கேட்டு தாய் தந்தையிரிடம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த மாரி செல்வம் பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மாரி செல்வத்தின் கழுத்தில் ஸ்கிப்பிங் கயிறை கொண்டு நெறித்து கொலை செய்துவிட்டு மதுரை எஸ் எஸ் காலனி போலீசா இருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு நாகராஜ், குருவம்மாள் மற்றும் மூத்த மகன் ஆகியோரிடம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: