ஆர்ப்பாட்டம்செய்திகள்

மதுரையில் மது குடிக்கும் பிரச்சனையில் இரண்டு வாலிபர்கள் வெட்டிக்கொலை | மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Two youths hacked to death in Madurai due to drinking problem Demonstration demanding closure of liquor shop

மதுரை உத்தங்குடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இதயத்துல்லா கடந்த திங்கள்கிழமை இரவு இதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சதீஸ் குமார் மது அருந்த 30 ரூபாய் கேட்டுள்ளார் பணம் இல்லை என்று சொன்ன காரணத்தினால் அவரை வெட்டி படுகொலை செய்கின்றார்.

இதே வாலிபர் அடுத்த நாள் புதன்கிழமை இரவு ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒரு பழனி என்ற வாலிபரிடம் மது அருந்த ரூபாய் 50 கேட்டுள்ளார் அவரும் தாராள தான் அவரையும் சதீஸ் குமார் வெட்டி படுகொலை செய்கின்றார். இதுகுறித்த மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சதீஸ் குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன உத்தங்குடி இதயத்துல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண வழங்க வலியுறுத்தியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்த உத்தங்குடியில் உள்ள மதுபான கடையை மூட வலியுறுத்தியும் உத்தங்குடி பகுதி பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடையை மூட வலியுறுத்தியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: