
மதுரை மாவட்டம் செக்கனூரணியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மகளீர் ஸ்பெசல் அரசு பேருந்துகள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பைபாஸ் சாலையில் வந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பொன்மேனி பேருந்து நிறுத்தத்தில், முன்னால் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பன்னீர்செல்வம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார்.
அப்போது அவருக்குப் பின்னால் வந்த லோகநாதன் என்ற ஓட்டுநர் இயக்கிவந்த அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்காத காரணத்தால் திடீரென முன்னால் நின்ற பேருந்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லோகநாதன் ஒட்டி வந்த அரசு பேருந்தின் முன்பக்கம் கடுமையாக சேதமுற்றது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அரசு பேருந்தின் ஓட்டுநர் லோகநாதன் உயிர் தப்பினார். பேருந்தில் பயணித்த நான்கு பயணிகள் படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்திற்குள்ளான பேருந்துகளில் பயணித்த பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து மாற்றுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.