செய்திகள்போலீஸ்விபத்து

மதுரையில் பைக்கில் அரசு பேருந்தை முந்த நினைத்த கல்லூரி மாணவர் பலி

A college student who tried to overtake a government bus on a bike in Madurai died

மதுரை முத்துராமலிங்கபுரம் பைக்காரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்ரம் (எ) ராம் தனது நண்பரான அக்கினி ராஜ் s/o மார்த்தாண்டம் (வயது 18) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து.

இதைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் பேருந்தின் முன்பக்கமாக மோதிய விபத்தில் சிக்கிய மாணவர்களில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்ந்து மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: