செய்திகள்

மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு

A school student who was traveling on the bus stairs in Madurai fell and died

மதுரை பழைய விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் 2 மகன் உள்ளனர்.

இந்த நிலையில் பெரிய மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறான்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்த போது அரசு பேருந்தில் கூட்டமாக இருந்ததால் விளாங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் கூட்டமாக ஏறினர். படிக்கட்டில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவர்கள் குரு தியேட்டர் அருகே பஸ் வந்த போது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில் அரசு பஸ்சின் டயர் மாணவர் மீது ஏறி இறங்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர் வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தார்.

வறுமை நிலையில் மாணவனை படிக்க வைக்க பள்ளிக்கு அனுப்பி வைத்த குடும்பம் இன்று அவர் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு கதறி அழும் காட்சி காண்போரையும் கண்ணீர் வரவழைத்தது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: