அமைச்சர்கல்விசெய்திகள்

நாகமலைபுதுக்கோட்டையில் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுவர், சிறுமி | கல்வி அமைச்சர் நேரில் சென்று நிதி உதவி | வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு

Boys and girls who have lost their parents in Madurai Minister of Education personally visited and provided financial assistance Arrange to build a house

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் ஏழ்மையான வாடகை வீட்டில் வசிக்கும் முத்து முருகன் – அனிதா செல்வி தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிவகுருநாதன் என்ற மகனும், நான்காம் வகுப்பில் படிக்கும் ஹரிணி என்ற மகளும் இருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் அனிதா செல்வி விபத்தில் உயிரிழந்த நிலையில், தந்தை முத்து முருகன் நோயினால் காலமானார். இந்நிலையில் பெற்றோரை இழந்து தவித்த சிறுவர், சிறுமிகளின் செய்தியை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உடனடியாக அவர்களுக்கு நிதி உதவி அளித்தும், கல்விக்காக ஏற்பாடு செய்யவும், நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுவர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளித்து, படிப்பதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும், அவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டி கொடுப்பதற்கும் உத்தரவாதம் அளித்துள்ளார். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி மக்களிடையே பெரிதும் பாராட்டை அடைந்தனர்.

இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: